Chrome Badge

ஒரேபார்வையில் உலகச் செய்திகள்

In
Updated: 11:27 GMT, Jan 12, 2017 | Published: 11:22 GMT, Jan 12, 2017 |
0 Comments
1056
news

சைப்பிரஸின் எதிர்காலம் குறித்த சமாதானப்பேச்சுகள் ஜெனிவாவில் ஆரம்பமாகின்றன.

அனைத்துலக ராஜதந்திரிகளின் பிரசன்னத்துடன் இடம்பெறும் இந்தப் பேச்சுக்களில் கிரேக்கம், துருக்கி மற்றும் பிரித்தானியத் தரப்புகள் பங்கெடுக்கின்றன.

1974 இல் பிளவுபட்ட சைப்பிரஸ் ,துருக்கிய சைப்பிரஸாகவும் , கிரேக்க சைப்பிரஸாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் தனது வணிக சாம்ராஜயத்தை புதல்வர்களிடம் கையளிக்கவுள்ள டொனால்ட் ரம்பின் முடிவை அமெரிக்க அரசாங்கத்தின் தார்மீக பணியக இயக்குநர் விமர்சனம் செய்துள்ளார்.

டொனால்ட்ரம்பின் இந்த முடிவானது கடந்த 40 வருடங்களாக அமெரிக்க அரச தலைவர்கள் பின்பற்றும் நியமங்களுடன் ஒத்துவரவில்லையென விமர்சிக்கப்பட்டுள்ளது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

80 க்கும் மேற்பட்ட போர்த்தாங்கிகள் மற்றும் கவசவாகனங்கள் சகிதம் மூவாயிரம்அமெரிக்கத் துருப்புகள் போலந்தை சென்றடைந்துள்ளன.

ரஸ்யாவின் அச்சுறுத்தலையடுத்து நேட்டோ நாடுகளைப் பாதுகாக்க, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உத்தரவில் இந்த நகர்வு எடுக்கபட்டுள்ளது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பிலிப்பைன்சில் கருத்தடைச்சாதனங்களை பெறமுடியாத நிலையிலுள்ள சுமார் அறுபது லட்சம் பெண்களுக்கு அவற்றை இலவசமாக வழங்க ஜனாதிபதி ரொட்ரிகோ டுதெரத் உத்தரவிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் இந்தஉத்தரவை கத்தோலிக்க தேவாலயங்ககள் கடுமையாக விமர்சித்தாலும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பப்பெண்கள் அநாவசியமாக கருத்தரிப்பதை இந்த நகர்வு கட்டுப்படுத்தப்படுமென ரொட்ரிகோ டுதெரத் கூறுகிறார்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் கடத்தப்பட்ட அமெரிக்க மற்றும் ஒஸ்ரேலியப் பேராசிரியர்கள் தலிபான்அமைப்பு வெளியிட்ட புதிய காணொளிப்பதிவில் தோன்றியுள்ளனர்.

2016 ஓகஸ்ற் மாதத்தில் மேற்படி இருவரும் காபூல் அமெரிக்க பல்கலைக்கழக முன்றலில் வைத்து ஆப்கான் ராணுவசீருடையில் வந்த தலிபான் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லபட்டிருந்தனர்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இயந்திரமனிதர்கள் மற்றும் செயற்கைஅறிவுத்திறன் ஆகிய நிலைகளின் சட்டபூர்வத்தன்மை குறித்த சட்டவிதிகளை முடிவுசெய்ய ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்று வாக்களிப்பை நடத்தவுள்ளது.

இன்றைய வாக்களிப்பின் மூலம் இயந்திரமனிதர்களின் சட்டபூர்வ நிலை இயந்திர நபர்கள் என்ற அங்கீகாரத்தில் வரக்கூடுமென எதிர்பார்க்கபடுகிறது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் வட பிராந்தியங்களில் கடுமையான காலநிலை நிலவிவருகின்றது.

பிரான்சில் ஆறுபிராந்தியங்களுக்கு கடுமையான காற்று மற்றும் பனிப்பொழிவை எச்சரிக்கும் வகையில் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஸ்கொட்லாந்து பிராந்தியத்துக்கு பனிப்பொழிவு மற்றும் கடும்காற்று எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தைப்பொங்கலுக்கு முன்னர் ஜல்லிக்கட்டுவழக்கில் தீர்ப்பு வழங்க சாத்தியமில்லையென இந்தியஉச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம் தைப்பொங்கல் வரும்நிலையில் அதற்கிடையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழகஅரசியல்கட்சிகள் கோரிவரும் நிலையில் உச்சநீதிமன்றம் இந்தஅறிப்பை விடுத்துள்ளது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இந்தியத்தேசியக்கொடியின் மூவர்ணம் பொறிக்கபட்ட “டோர் மற்” எனப்படும் மிதியடிகளை இணையவணிகத்தில் விற்பனை செய்த அமேசன்நிறுவனம் இந்தியா விடுத்த எச்சரிக்கையை அடுத்து அவற்றை தனது விற்பனையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.

மேற்படி மிதியடிகளை திரும்பப் பெறாவிட்டால் அமேசன் ஊழியர்களுக்கு இந்திய நுழைவு அனுமதி (வீசா) வழங்கப்படாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மாசுவராஜ் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இந்தியாவில் உள்ள மக்டொனால்ட் துரிதஉணவகங்களில் விரைவில் தோசை பேகர்கள் அறிமுகப்படுத்தப்படலாமென எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் இதழ் செய்திவெளியிட்டுள்ளது.
இந்தச்செய்தி இந்திய சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகின்றது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)