Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

In ஆன்மீகம்
Updated: 09:50 GMT, Feb 6, 2017 | Published: 09:50 GMT, Feb 6, 2017 |
0 Comments
1637
This post was written by : Varshini

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகம், பக்தர்கள் புடைசூழ இன்று (திங்கட்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில், கடந்த 3ஆம் திகதியிலிருந்து 5ஆம் திகதிவரை இரவு பகலாக தொடர்ந்து மூன்று தினங்களுக்கு எண்ணெய்க் காப்பு இடம்பெற்றது.

அதனையடுத்து இன்றைய தினம் காலை 7.15 முதல் 10.45 வரையான சுபவேளையில் ராஜகோபுர ஸ்தூபிகள் கும்பாபிஷேகம் இடம்பெற்று, ஹெலிகொப்டரிலிருந்து மலர்மாரி பொழிய, மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது யானை மற்றும் வெள்ளை குதிரைகளின் அணிவகுப்புடன் மேள தாளங்கள் முழங்க அம்பாளின் வெளிவீதி உலாவும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் திருவருட் கடாட்சத்தைப் பெற்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg