Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஓ.பி.எஸ்.இற்கு மதுசூதனன் ஆதரவு

In இந்தியா
Updated: 09:41 GMT, Feb 9, 2017 | Published: 09:41 GMT, Feb 9, 2017 |
0 Comments
1046
icon_com
This post was written by : Risha
o-panneerselvam

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மதுசூதனன் வருகை தந்து நேரில் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

மதுசூதனன், சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தனக்குப் பிறகு அவைத்தலைவர் மதுசூதனனையே பொதுச்செயலாளராக்க விரும்பியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg