Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா கபட நாடகம் ஆடுகிறார்: எதிர்ப்பு புரட்சியில் ஓ.பி.எஸ்

In இந்தியா
Published: 09:56 GMT, Feb 9, 2017 |
0 Comments
1076
icon_com
This post was written by : Risha
o-panneerselvam-is-greeted_0eef1398-eea2-11e6-90af-e8d3e91f500c

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, கட்சி, ஆட்சியைக் கைப்பற்றி குடும்ப சொத்தாக மாற்றுவதற்காக கபட நாடகம் ஆடி வருவதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிட தியானத்தின் பின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிரான புரட்சியை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கட்சி, ஆட்சிப் பொறுப்புக்கு வர மாட்டேன் என்று கூறி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்த சசிகலா, தற்போது கட்சி, ஆட்சியைக் கைப்பற்றி குடும்ப சொத்தாக மாற்றுவதற்காக கபட நாடகம் ஆடி வருகிறார்.

அதேவேளை, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்பட்டு, அவர் பயன்படுத்திய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

அத்துடன், தம் மீது செயற்கையான குற்றச்சாட்டுகளை சுமத்தினால் சில தகவல்களை வெளியிட வேண்டி வரும்’ என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனனுக்கு நன்றியையும் ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg