Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா பதவியேற்பிற்கான பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் – தமிழகத்தில் நடப்பது என்ன -01

In
Updated: 10:57 GMT, Feb 10, 2017 | Published: 09:56 GMT, Feb 9, 2017 |
0 Comments
1489
icon_com
This post was written by : elayathambi
800x480_IMAGE61218352

சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா அரங்கத்தை சுற்றிலும் போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியமைக்க அ.தி.மு.க., சட்டமன்ற தலைவர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செவ்வம் ஆகியோர் ஆளுனர் வித்யாசகர் ராவை சந்தித்து உரிமை கோரிய நிலையில், ஆளுநர் இது தொடர்பில் வரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

எனவே ஆளுநரிடமிருந்து இதுவரையிலும் உறுதியான தகவல் ஏதும் வராததால், சென்னை பல்கலைகழக நூற்றாண்டு அரங்கத்தில் போடப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சசிகலா அ.தி.மு.க., சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஆளுனின் சென்னை வருகைக்கு பின்னர் உடனடியாக பதவியேற்கும் வகையில் சென்னை பல்கலை நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சசி பதவியேற்பதற்காக கடந்த 5ஆம் திகதி முதல் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். பின்னர் மெரினாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த செவ்வியின் பின் அரசியல் களம் தலைகீழாக மாறியது.

சிறைவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க உறுப்பினர்கள் குறித்து பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சட்டமன்ற உறுப்பினர்களை மீட்கக் கோரிய வழக்கில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் காவல்துறை பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில், விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20 பேர் சாப்பிடாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது.

எனவே இந்த குற்றச்சாட்டு குறித்து வரும் திங்கட்கிழமைக்குள் தமிழக அரசும், காவல்துறையும் பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சாப்பிடாமல் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சாப்பாடு வழங்கவும் மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞர், ‘சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் சட்டவிரோத காவலில் இல்லை, அனைவரும் இப்போது இருக்கும் இடத்தில் பாதுகாப்பாக உள்ளனர்’ என்று அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் ஆளுனரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இதற்கான ஆதரவு கடிதத்தையும் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ளதாக கூறுப்பட்டது. ஆனால், சசிகலாவை ஆதரித்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்; அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 அவசர வழக்காக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு (2ஆம் இணைப்பு)

சசிகலா முதல்வராக பதவியேற்க தடை கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மறுப்பு தெரிவித்துள்ளது.

குறித்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளதோடு, வழக்கு விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

சசிகலா முதல்வராக பதவியேற்க தடை கோரும் மனு: இன்று விசாரணை

சசிகலா முதல்வராக பதவியேற்க தடை கோரும் மனு இன்றுபகல் (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதற்கிடையே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகின்றது.

சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வெளியிடும் வரை சசிகலா முதலமைச்சராக பதவியேற்கக் கூடாது எனவும், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தடை விதிக்கக் கோரியும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தினர் உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் தாக்கல் செய்த குறித்த மனு மீதான விசாரணை நாளை (சனிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவர் முதலமைச்சராக பதவியேற்க தீர்மானித்தார்.

இதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

எனினும் நேற்று (வியாழக்கிழமை) ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் தனித்தனியே தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

ஆளுநரிடம் பன்னீர் முன்வைத்த கோரிக்கைகளும் கோப்புகளும்

ஆளுநரைச் சந்தித்த ஓ.பன்னீர்ச்செல்வம் அவரிடம் முன்வைத்த கோரிக்கைகளும் கோப்புக்களும் வெளியாகியுள்ளன. அவர் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்துள்ளார் அவையாவன.

  1. முதல்வர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக கையளித்த கடிதத்தை மீளப் பெற விரும்புகிறேன்.
  2. சசிகலா தனக்கு பெரும்பான்மை ஆதரவு  இருப்பதாக சொல்வது  பொய் அல்லது முறைகேடானது அது விசாரிக்கப்பட வேண்டும்.
  3. சசிகலாவை அதிமுகவின் சட்டமன்ற அணித் தலைவராக நியமித்ததை ஏற்கக்கூடாது. காரணம் அதில் முறைகேடுகள் உள்ளன.
  4. சசிகலா நியமிக்கப்பட்டிருக்கும் ஆளும் கட்சியின் அணித்தலைவர் பதவியை அவர் கைவிடுவதற்கு அவரை  வலியுறுத்த வேண்டும்.
  5. சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது.

மேலேயுள்ள கோரிக்கைகளைவிட ஆறு எழுத்து மூலமான ஆவணங்கலும் கையளிக்கப்பட்டுள்ளன. அவையாவன

இராஜினாக் கடிதத்தை வாபஸ் பெறக் கோரும் கடிதம்

  1. ஜெயலலிதாவின் நினைவில்லமாக போயஸ் கார்டன் இல்லத்தை மாற்றுவதற்கான ஆவணம்.
  2. சென்னை கமிஷனரை மாற்றும் உத்தரவுக் கோரிக்கை
  3. சசிகலாவின் பிடியில் விடுதியில் தங்கியிருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தாம் கடத்தப்பட்டிருப்பதாக கையளித்த கடிதங்கள்.
  4. சசிகலா பொது செயலாளரானது விதி மீறல் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் கோப்பு.
  5. தனக்கிருக்கும் ஆதரவை நிறுவுவதற்கான கால அவகாசத்தை கேட்கும் கடிதம் ஆகியன.

 

ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கேட்டார் சசிகலா

இன்று மாலை 7.20 முதல் அரை மணி நேர சந்திப்பை ஆளுநருடன் மேற்கொண்டுவிட்டு போயஸ் கார்டன் திரும்பி இருக்கிறார் சசிகலா. இன்னும் சற்று நேரத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்னீர்செல்வத்துடனான சந்திப்பை விட அதிக நிமிட சந்திப்பை சசிகலா மேற்கொண்டார். இச்சந்திப்பின்போது தம்மை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை அவர் கையளித்தார் அத்துடன் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை கையளிக்குமாறும் அவர் ஆளுநரைக் கேட்டுள்ளார்.

ஆளுநருடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்தார் ஓ.பி.எஸ்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

எனினும், குறித்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவர் முழுமையாக எதனையும் குறிப்பிடவில்லை.

அம்மாவின் நல்லாசியுடன் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செயற்படுவோம். தர்மம் வெல்லும் என்று கூறி ஓ.பி.எஸ். தனது உரையை நிறைவு செய்திருந்தார்.

ஆளுநருடனான ஓ.பி.எஸ்.-இன் சந்திப்பு நிறைவு

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பியுள்ளார்.

முப்பது நிமிடங்கள் வரை இடம்பெற்ற குறித்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பது தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஆளுநருடனான சந்திப்பு தொடர்பில் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களை கூட்டி கருத்து தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ராஜினாமா செய்யுமாறு மிரட்டப்பட்டதாக ஆளுநரிடம் ஓ.பி.எஸ். முறைப்பாடு

பதவியை ராஜினாமா செய்யுமாறு தாம் மிரட்டப்பட்டதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை, தமது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவினால் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜினாமாவை மீளப்பெறுவது தொடர்பிலும் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜினாமாவை மீளப்பெறுவதற்கு சட்டத்தில் இடம் இல்லாத போதிலும், அது தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு ஆளுநருக்கு விசேட அதிகாரம் உண்டு. அதன்படி அவரது ராஜினாமா மறுபரீசீலனை செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆளுநருக்கும் ஓ.பி.எஸ்.-இற்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பம்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கும் வகையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகைக்குள் சென்றுள்ள நிலையில், அங்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மற்றும் பி.எச்.பாண்டியன், மதிசூதனன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் முதலமைச்சருடன் உடன் சென்றுள்ளனர்.

ஆளுநருடன் என்னென்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்பது தொடர்பில் பொறுத்திருந்தே அறிந்துக் கொள்ள வேண்டும்.

தமிழக நிலவரம் குறித்து பிரதமருடன் தம்பிதுரை பேச்சு

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மக்களைவை துணைத் தலைவர் தம்பிதுரை பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மக்களைவை துணைத் தலைவர் மற்றும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார் ஓ.பி.எஸ்

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்-உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வகையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஆளுநர் மாளிகையை வந்தடைந்துள்ளார்.

ஆளுநரை சந்திக்க இல்லத்திலிருந்து புறப்பட்டார் ஓ.பி.எஸ்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 5 மணிக்கு சந்திக்கவுள்ள நிலையில், தனது இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.

சட்ட மன்ற உறுப்பினர்கள் உட்பட 10 பேருடன் ஆளுநரை ஓ.பி.எஸ். சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நத்தம் விஸ்வநாதன் மற்றும் மதிசூதனன் ஆகியோரும் பன்னீர்செல்வத்துடன் உடன் சென்றுள்ளனர்.

இதன்போது தனது ராஜினாமா கடிதத்தை மீளப் பெறுவது தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார் வித்யாசாகர் ராவ்

சென்னை விமான நிலையத்திலிருந்து சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார் வித்யாசாகர் ராவ்

சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அங்கிருந்து ஆளுநர் அலுவலகத்தை புறப்பட்டுள்ளார்.

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிவருகின்ற நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவின் தீர்மானத்திலேயே தமிழக அரசியலில் திருப்புமுறை ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


சென்னை வந்தடைந்தார் ஆளுநர்

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவிவருகின்ற நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சற்று முன்னர் சென்னையை வந்தடைந்துள்ளார்.

சென்னை வந்துள்ள ஆளுநரை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை 5 மணிக்கும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா 7.30 மணிக்கும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் உறுதியாகியுள்ளன.

இந்நிலையில், ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறக் கூடாது என்ற ரீதியில் 500 இற்கும் அதிகமான பொலிஸார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த தீபா ஆதரவாளர்கள் கைது

ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமெழுப்பி வந்த சுமார் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் ஆதரவாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சசிகலா <  > பன்னீர் :  தமிழகத்தில் நடப்பதென்ன? – உடனுக்குடன் செய்திகள்

தமிழகம் அண்ணா விமான நிலையத்தில் வந்திறங்கும் ஆளுனரை வரவேற்க தமிழகத்தின் காபந்து முதல்வர் பன்னீர்ச் செல்வம் விரைவது பிந்திய செய்தி. அவருக்கான ஆதரவை அ.தி.மு.கவின் அவைத்தலைவர் மதுசூதனன் தனது ஆதரவை பன்னீர்ச்செல்வத்துக்கு வழங்கியிருப்பது, புதிய அதிரடியாக சசிகலாவிற்கு வந்திருக்கிறது. இதுவரை என்ன ஆயிற்கு என ஓர் கழுகுப் பார்வை.

கடந்த செவ்வாய் மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருந்து தன் மௌனம் கலைத்தது முதல் தமிழக அரசியலில் வீசத் தொடங்கிய புயல் இன்னும் ஓயவில்லை.

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலேயே 30 ஆகஸ்ட் 2016 இல் ஆளுனர் ரோசையா ஓய்வு பெற்றபின்னர், நிரந்தர ஆளுனர் இல்லாத மானிலமாக தமிழ் நாடு இருக்கிறது.
அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற வி.கே.சசிகலா சட்டமன்றத்தின் கட்சி அணித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் தனது முதல்வர் பதவியை கடந்த ஞாயிறு அன்று ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழகம் நிரந்தர முதல்வர் இல்லாத மானிலமாகவும் தற்போது மாறியுள்ளது.

கட்சித் தொண்டர்களும் பல முன்ணணி ஊடகங்களும் சசிகலாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும், நான்கு ஆண்டுகளுக்கு மேலான தமது கட்சி ஆட்சியில் தம்மை தக்க வைக்கும் நோக்கில் சட்ட மன்ற உறுப்பினர்கள் சின்னம்மா என்று தாம் அழைக்கும் சசிகலாவை முதல்வராக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது..
சசிகலாவும் அவரை நெறிப்படுத்தும் அவரது மன்னார்குடி வட்டாரமும் ஆட்சியை தம் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக பல தமிழக ஊடகங்கள் சொல்லி வருகின்றன.

இன் நிலையில் பேசா மடந்தையாகவும், காலில் விழும் கலாசாரம் கொண்டவராயும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது போர்க்கொடி தூக்கி இருக்கிறார். சசிகலாவிற்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கினாலும், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற அளவில் சட்ட மன்ற உறுப்பினர்களை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் சசிகலா வைத்துள்ளார். கட்டுப்பாடு என்பதைவிட ஆளுனரிடம் தனது சார்பு பெரும்பான்மையை நிறுவும் வரை அவர்களை ஒருவித சிறை வைப்பில் சசிகலா வைத்துதிருக்கிறார் எனக் குறிப்பிடப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg