Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டம் விவகாரம்: பேசி தீர்த்துகொள்ள வேண்டும் என்கிறார் ஜனாதிபதி

In இலங்கை
Updated: 12:17 GMT, Feb 9, 2017 | Published: 12:17 GMT, Feb 9, 2017 |
0 Comments
1236
This post was written by : Vithushagan

மாலேபே சைட்டம் தனியார் பல்கலைகழகத்தில் எற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அணைவரும் ஒரு மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்தை செய்து தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

’இரண்டு வருட ஆட்சி காலப்பகுதியில் ஜனாதிபதியாக பதவியை பொறுப்பேற்ற நான் அடுத்தடுத்து இரண்டு முறை நுவரெலியா மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளேன்.

அமைச்சர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோர் மலையக மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் எழுப்புகின்றனர். அரசாங்கம் என்ற ரீதியில் மலையக மக்களுக்க விசேடமாக சலுகைகள் செய்ய காத்திருக்கின்றேன்.

இன்று மாலேபே சைட்டம் தனியார் பல்கலைகழகத்தில் எற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அணைவரும் ஒரு மேசையில் அமர்ந்து பேச்சுவார்த்த செய்து தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக அடுத்த வாரம் இந்த நடவடிக்கையை நான் முன்னெடுக்க உள்ளேன். பல்கலைகழகங்களில் வைத்திய பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அதற்காக பல்கலைகழகத்திற்கு செல்லும் மாணவர்கள் ஒழுங்காக வகுப்புகளுக்கு சென்று பாடங்களை கற்றுக்கொள்வது தொடர்பில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும்.

வருடம் ஒன்றிற்கு 75,000 தொடக்கம் 80,000 வரையிலான மாணவர்கள் பல்கலைகழகங்களுக்கு உள்வாங்கும் வகையில் கல்வி மட்டம் உயர்ந்துள்ளது.

ஆகையினால் பல்லைகழகத்திற்கு செல்லும் மாணவர்களுடைய பிரச்சினைகளில் அதிதி கவனம் செலுத்தப்படும். அதேபோன்று மாலேபே சைட்டம் கல்லூரியின் மாணவர்களின் பிரச்சினையில் அதித கவனம் செலுத்தப்படும்.

மலையகத்தில் வாழ்கின்ற மக்களுடைய லயன் வாழ்க்கை ஒழிக்கப்பட்டு தனி வீடுகள் அமைத்து அவர்களுடைய பொருளாதார அபிவிருத்தியை மேலோங்க செய்ய அணைவரும் ஒன்றுப்பட வேண்டும்’ என தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg