Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியுசிலாந்து பிரதமரை சந்தித்தார் சீன வெளியுறவு அமைச்சர்

In உலகம்
Published: 10:29 GMT, Feb 10, 2017 |
0 Comments
1288
icon_com
This post was written by : Sylviya
10

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), நேற்று (வியாழக்கிழமை) நியுசிலாந்து பிரதமர் பில் இங்லிஷ்ஷை (Bill English) ஒக்லன்டில்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்தின் போது சீன ஜனாதிபதி ஸி ஸின்பிங் (Xi Jinping) நிகழ்த்திய உரை உலகத்திற்கு சிறந்த விளக்கங்களை அளிக்கும் வகையில் இருந்தது என குறித்த சந்திப்பின் போது  பிரதமர் பில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உலகமயமாதல் மற்றும் சுதந்திர வர்த்தகம் தொடர்பில் சீனாவுடன் இணைந்து ஒத்துழைக்க நியூசிலாந்து விரும்புதாகவும் பில் தெரிவித்துள்ளார்.

மேலும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, உட்கட்டமைப்பு, மனிதநேயம், சுற்றுலா, கல்வி, அறிவியல், தொழிநுட்பம் மற்றும் சட்ட அமுலாக்கம் தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் குறித்த இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர் என  அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg