Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யூரோ வலயம் எப்போதும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: மெர்க்கெல்

In ஐரோப்பா
Published: 11:01 GMT, Feb 10, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Sylviya
11

யூரோ வலயம் எப்போதும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர், பர்லினில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே தெரிவித்துள்ளார்.

அதன் போது கருத்து தெரிவித்த அவர், “யூரோ வலயம் எப்போதும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எம்மால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் யூரோ வலயம் எப்போதும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இருப்பிடம் கோரி விண்ணப்பித்த குடியேற்றவாசிகளில் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குடியேற்றவாசிகளை விரைவில் திருப்பியனுப்புவது குறித்து ஜேர்மனியில் புதிதாக கொண்டுவரப்பட்ட சட்டம் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த மெர்க்கெல், “குடியேற்றவாசிகளில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் இருப்பீர்களாயின் அவர்கள் மீண்டும் இருப்பிடம் கோரி விய்யப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg