Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு அயர்லாந்தில் உள்ள பறவைகள் மீண்டும் வைரஸ் தொற்றால் பாதிப்பு

In
Published: 12:43 GMT, Feb 10, 2017 |
0 Comments
1188
icon_com
This post was written by : Sylviya
14

வடக்கு அயர்லாந்தில் உள்ள பறவைகள் மீண்டும் ஒருவித வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

H5N8 என அழைக்கப்படும் குறித்த வைரஸ், உயிரிழந்த அன்னப்பறவைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக இது தொடர்பில் வெளியாகிய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த வைரஸ் தொற்று, இதற்கு முன்னதாக வடக்கு அயர்லாந்தில் உள்ள Lough Beg  எனும் பகுதிக்கு அருகில் இம் மாத ஆரம்பத்தில் பரவியதாக குறிப்பிடப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை, கோழி வளர்ப்பு தொடர்பில் விவசாயத் திணைக்களம் கட்டுப்பாடுகள் விதித்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கட்டுப்பாடுகளின் படி, பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள் வெளியே வராதவாறு பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், கோழிகள் வெளியே நடமாடும் பட்சத்தில் அவை H5N8 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg