Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேராசிரியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கியில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 06:28 GMT, Feb 11, 2017 | Published: 06:28 GMT, Feb 11, 2017 |
0 Comments
1247
This post was written by : Sylviya

துருக்கி அரசாங்கத்தால் பல பேராசிரியர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (வெள்ளிக்கிழமை) அங்காராவில் பல நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம், துருக்கித் தலைநகர் அங்காராவில் நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கலைக்க முற்பட்ட பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதன் போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும், 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் கடந்த வருடம் முறியடிக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த பேராசிரியர்கள் மற்றும் 4000 க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் ஆகியோர் அண்மையில் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சதிப்புரட்சியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் துருக்கியில் இதுவரை 125,000 க்கும் அதிகமானோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் 40,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சதிப்புரட்சிக்கு அமெரிக்காவை தளமாக கொண்டு செயற்படும் மதகுரு பெத்துல்லா குலெனே காரணம் என துருக்கி குற்றஞ்சாட்டியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg