Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா?: விரைவில் தீர்மானிக்கப்படும் என்கிறார் டிலான்

In இலங்கை
Updated: 09:24 GMT, Feb 11, 2017 | Published: 09:24 GMT, Feb 11, 2017 |
0 Comments
1149
This post was written by : Risha

தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து நீடித்திருப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்த தேசிய அரசாங்கத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் மேற்கொண்ட இரண்டு வருட ஒப்பந்தம் எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

எனவே ஒப்பந்தத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்காத போதிலும், கட்சியின் யாப்பு பிரகாரம் இவ்வாறான விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg