Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லி ஒரு சகாப்தமாக உருவெடுத்து வருகிறார்: கவாஸ்கர் புகழாரம்

In கிாிக்கட்
Published: 08:54 GMT, Feb 11, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Anojkiyan
cricket-india-v-bangladesh-1st-test-d2_bf583f44-ef9b-11e6-a367-47680441e31e

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, ஒரு சகாப்தமாக உருவெடுத்து வருவதாக முன்னாள் அணித்தலைவரும், தொலைக்காட்சி வர்ணணையாளருமான சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடைபெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோஹ்லி, இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

தொடர்ந்து 4 டெஸ்ட் தொடரில் 4வது இரட்டை சதத்தை பதிவு செய்த கோஹ்லி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 4 தொடர்களில் 4 இரட்டை சதம் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு அவுஸ்ரேலியாவின் ஜாம்பவான் பிராட் மேன், இந்திய அணியின் டிராவிட் 3 தொடர்களில் 3 இரட்டை சதம் அடித்து இருந்தனர். இந்நிலையில், இச்சாதனை குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில், பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை தகர்த்து எறியும் வகையில் விராட் கோஹ்லி அதிரடியாக விளையாடுகிறார். அவர் பந்து வீச்சாளர்களை அடக்கி விடுகிறார்.

தொடர்ந்து, நிலையாக விளையாடுவது அவரது வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது. கிரிக்கெட்டில் உள்ள அனைத்து சாதனைகளையும் விராட் கோஹ்லி முறியடிப்பார். அவர் ஒரு சகாப்தமாக உருவெடுத்து வருகிறார். என கூறினார

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg