Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவை கண்டுக்கொள்ளாத சீனா: தென் சீன கடற்பரப்பில் மீண்டும் பதற்றநிலை

In
Updated: 05:28 GMT, Feb 12, 2017 | Published: 05:20 GMT, Feb 12, 2017 |
0 Comments
1772
This post was written by : Anojkiyan

தென் சீன கடற்பரப்பிற்கு மேலே அமெரிக்க ராணுவ விமானத்தை, சீன விமானம் பின் தொடர்ந்துள்ள சம்பவம், அமெரிக்காவின் அடக்கு முறைக்கு ஒருபோதும் தாம் அடிபனிய போவது இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின் டொனால்ட் ட்ரம்ப், முதல் முறையாக சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன் அண்மையில், தொலைபேசியில் உரையாடி ‘ஒரே சீனா கொள்கை’க்கு மதிப்பளித்து அதனை பின்பற்ற சம்மதம் தெரிவித்துள்ளதன் பின்னணியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

தென் சீன கடற்பரப்பிற்கு மேலே தன்னுடைய ராணுவ விமானம் பறந்தபோது, சீன கண்காணிப்பு விமானம் 300 மீட்டர் தூரம் பின்தொடர்ந்து வந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

‘ஸ்கார்போரஃப் ஷோல்’ என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பவளப்பாறை தீவு அருகில் நிகழ்ந்த இந்த சம்பவம் பாதுகாப்பற்ற ஒன்றாக இருந்ததாக அமெரிக்க ராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சகம், தங்களுடைய விமானி பொறுப்புணர்வுடன், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இருநாடுகளுக்குமிடையில் மீண்டும் விரிசல் விழும் நிலை தோன்றியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg