Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த தடை

In இந்தியா
Published: 06:00 GMT, Feb 12, 2017 |
0 Comments
1176
icon_com
This post was written by : Surenth
56558738

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு புதுவை மாவட்ட ஆட்சியாளர் தடை விதித்துள்ளார். லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்கான கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் ஜல்லிக்கட்டு பேரவையினர் கடந்த 2 ஆம் திகதி அனுமதி கோரியிருந்தனர். இதனையடுத்து, குறித்த பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதித்து புதுவை மாவட்ட ஆட்சியாளர் சத்யேந்திரசிங் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மத்திய சுற்றுச்சூழல் வனத்துறையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 11 ஆம் திகதி ஜல்லிக்கட்டு தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி காளைகள் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால் புதுவை சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே நடத்தப்பட வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தாகூர் கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஜல்லிக்கட்டு போட்டியை தற்போதைக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg