Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் ஏவுகணை சோதனையை சிறிதேனும் ஏற்க முடியாது: ஷின்சோ அபே

In உலகம்
Published: 08:02 GMT, Feb 12, 2017 |
0 Comments
1231
This post was written by : Sylviya

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை சிறிதேனும் ஏற்க முடியாது என ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே (Shinzo Abe) நேற்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஃபுளோரிடாவில் நடத்தப்பட்ட கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்துள்ளார்.

அதிநவீன முறையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கியுள்ள வடகொரியா, குறித்த ஏவுகணையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சோதனையிடவுள்ளதாக நேற்று அறிவித்திருந்த நிலையிலேயே ஷின்சோ அபே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

வடகொரியாவால் உருவாக்கப்பட்டுள்ள குறித்த ஏவுகணை, இன்று அதிகாலையில் கிழக்கு கடற்கரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg