Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுவான உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியாத பட்சத்தில் சட்டரீதியாக விலகிச் செல்ல முடியும்: நிபுணர்

In
Updated: 10:05 GMT, Feb 12, 2017 | Published: 10:03 GMT, Feb 12, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Sylviya
11

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் இரு தரப்பினரும் பொதுவான உடன்படிக்கை ஒன்றை எட்ட முடியாத பட்சத்தில் பிரித்தானியாவால் சட்டரீதியாக விலகிச் செல்ல முடியும் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், விலகிச் செல்வது குறித்த ஒப்பந்தம் ஒன்று இல்லாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பில் லிஸ்பன் விதியின் 50 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த குடியொப்ப வாக்கெடுப்பு மூலமான கருத்துக்கணிப்பு கடந்த வருடம் ஜூன் 23 ஆம் திகதி நடத்தப்பட்டது.

அதன்போது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என, சுமார் 52 சதவீதமான மக்கள் வாக்களித்திருந்தனர். குறித்த தீர்வு உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இருப்பினும், குறித்த தீர்வில் எதுவித மாற்றமும்  இல்லை எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் இறுதிப் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும்  பிரதமர் தெரேசோ மே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg