Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அல் – பாப் நகரில் உள்ள ஐ.எஸ் இன் நிலைகள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல்

In ஐரோப்பா
Updated: 10:36 GMT, Feb 12, 2017 | Published: 10:30 GMT, Feb 12, 2017 |
0 Comments
1247
This post was written by : Sylviya

வடக்கு சிரியாவின் அல் – பாப் நகரில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நேற்று (சனிக்கிழமை) துருக்கி இராணுவம் விமான தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதல்களின் போது  போது ஐ.எஸ் தீவிரவாதிகளின் 33 நிலைகள் தரைமட்டமாகியுள்ளதாக துருக்கி இராணுவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் , சுமார் 42 ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கும் முயற்சியில், துருக்கி துருப்புக்களின் ஆதரவுடன் தாக்குதல் நடத்தும் சிரிய போராளிகளும் ஐ.எஸ் வசமிருந்த சில புறநகர் பகுதிகளை அண்மையில் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொடர் தாக்குதல்களால் ஐ.எஸ் தீவிரவாதிகள் பின்வாங்கியுள்ள நிலையில் குறித்த நிலைமை துருக்கி மற்றும் ஏனைய துருப்புக்களுக்கு சாதகமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg