Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் ஏவுகணைச் சோதனை வெற்றியளித்துள்ளது

In உலகம்
Published: 04:36 GMT, Feb 13, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Sylviya

வடகொரியத் தலைவர் கிம் ஜொங் – உங்கின் (Kim Jong-un) மேற்பார்வையின் கீழ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றியறித்துள்ளது என வடகொரியா அறிவித்துள்ளது.

குறித்த ஏவுகணை தொடர்பில் கருத்து தெரிவித்த கொரிய ஊடகம் ஒன்று, வடகொரியாவால் உருவாக்கப்பட்டுள்ள ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை கொண்டது என தெரிவித்துள்ளது.

குறித்த ஏவுகணை சோதனை தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஆத்திரமூட்டும் செயலாகவே இது உள்ளது என தெரிவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க, இதற்கு முதல் வடகொரியாவால் சோதனை செய்யப்பட்ட ஏவுகணை தொடர்பில் பல உலக நாடுகள் கடும் கண்டனம் விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடும் பொருட்டு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா என்பன அவசர கூட்டம் ஒன்றை கூட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg