Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்டை ஈடன் கார்டனில் ஆரம்பிக்க விருப்பம்: ஆப்கானிஸ்தான்

In கிாிக்கட்
Updated: 05:11 GMT, Feb 13, 2017 | Published: 05:10 GMT, Feb 13, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Shailu
Shafiqullah Stanikzai

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை ஈடன் கார்டனில் ஆரம்பிக்க விரும்புகிறோம் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தலைவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாடுவதில் தற்போது 10 அணிகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஐ.சி.சி. அனுமதி வழங்கியுள்ளது. இதை 12 ஆக உயர்த்த ஐ.சி.சி. தற்போது திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணி டெஸ்ட் அங்கீகாரத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இறுதி முடிவை ஐ.சி.சி. எதிர்வரும் ஏப்ரல் மாதம் எடுக்க இருக்கவிருக்கின்ற நிலையில், முதல் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை இந்தியாவிற்கு எதிராக ஈடன் கார்டனில் விளையாட நாங்கள் விரும்புகிறோம் என்று ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷபிகுல்லா ஸ்டானிக்சாய் (Shafiqullah Stanikzai) கூறுகையில்,

”நாங்கள் கிரிக்கெட்டில் முன்னணியாக வளர இந்தியா அதிக அளவில் ஆதரவு அளித்தது. இந்தியாவிற்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் எங்களது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்குவது சரியானதாக இருக்கும் என்பதை அனைத்து ஆப்கானிஸ்தானியர்கள் சார்பில் என்னால் கூற முடியும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg