Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு: நாளை காலை தீர்ப்பு

In
Updated: 14:09 GMT, Feb 13, 2017 | Published: 05:13 GMT, Feb 13, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
SASIKAL A VS PANNEER

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை –  கூவத்தூரிலேயே தங்குகிறார் சசிகலா

கூவத்தூர் விடுதியிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை   தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவரும் சசிகலா, கூட்டம் முடிந்த பின்னர், இன்று இரவு அங்கேயே சசிகலா தங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூவத்தூர் விடுதியிலுள்ள உறுப்பினர்களை இன்றும் சந்திக்கிறார் சசிகலா

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கூவத்தூர் விடுதிக்கு மூன்றாவது நாளாகவும் சசிகலா சற்றுமுன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்க ஓ.பி.எஸ்.இற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சந்தர்ப்பத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்க வேண்டுமெனவும் இவ்விடயம் தொடர்பாக ஆளுநர் விரைவாகவும் நிதானமாகவும் தனது முடிவை அறிவிக்க வேண்டுமெனவும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் உத்தரவிடவேண்டுமென கோரி பொதுநல மனுத்தாக்கல்

தமிழகத்தில் ஆட்சியமைக்க அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் உத்தரவிடவேண்டுமென கோரி, ஏ.எல்.சர்மா என்பவரால் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.வின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தை அடைந்தார் ஓ.பி.எஸ்: அதிகாரிகளுடன் ஆலோசனை

தலைமைச் செயலகத்திற்கு சென்றுள்ள தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது சிரேஷ்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இச் சந்திப்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா மற்றும் உள்துறை, நிதித்துறை செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

தலைமைச் செயலகம் சென்றிருந்த தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரை சந்திப்பாரென எதிர்பார்க்கப்பட்டபோதும் குறித்த சந்திப்பு இடம்பெறவில்லை.

தலைமைச் செயலகம் புறப்பட்டார் ஓ.பி.எஸ். – ஸ்டாலினும் வருகை

முதலமைச்சர் பன்னீர்செல்வம், கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திருந்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சகிதம் தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதேவேளை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க.வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சற்றுமுன் தலைமைச் செயலகத்தை அடைந்துள்ளார்.

மா.ஜ.க. உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவு? – வாக்குப்பெட்டி வைத்து கருத்துக்கணிப்பு!

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தான் ஓ.பன்னீர்செல்வத்தையா அல்லது சசிகலாவையா ஆதரிப்பதென தீர்மானிப்பதற்காக நாகப்பட்டினத்திலுள்ள தமது அலுவலகத்தில் வாக்குப் பெட்டி வைத்து கருத்துக்கணிப்பை நடத்திவருகிறார்.

காலை 6 மணிக்கு ஆரம்பமாகிய கருத்துக்கணிப்பு மாலை 6 மணிக்கு நிறைவடையவுள்ளது.

தலைமைச் செயலகம் வரவுள்ளார் ஓ.பி.எஸ்! – அதிகாரிகள் அவசர சந்திப்பு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருவார் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக பொலிஸ் இயக்குநர் டி.கே.ராஜேந்திரன், பொலிஸ் ஆணையர் ஜோர்ஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

பன்னீர்செல்வத்திற்கு 3 லட்சம் பேர் நேரில் சென்று ஆதரவு!

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கடந்த 5 நாட்களில் மாத்திரம் 3 லட்சம் பேர் நேரில் சென்று ஆதரவளித்துள்ளனர். அத்தோடு, ‘மிஸ்ட் கோல்’ மூலமாக சுமார் 35 லட்சம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

தமிழக அரசியல் களத்தில் பன்னீர்செல்வமா சசிகலாவா என்ற போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், பன்னீர்செல்வத்திற்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg