Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தவிசாளர் பதவியை ஏற்க மறுத்தார் ஹசன் அலி! – மு.கா.வின் செயலாளராக மன்சூர் நியமனம்

In இலங்கை
Updated: 06:18 GMT, Feb 13, 2017 | Published: 06:06 GMT, Feb 13, 2017 |
0 Comments
1422
This post was written by : Varshini

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி குறித்த சர்ச்சையானது அக்கட்சிக்குள் பல்வேறு குழப்பநிலைகளை தோற்றுவித்திருந்த நிலையில், செயலாளர் நாயகம் பதவி தற்காலிகமாக நீக்கப்பட்டு கட்சியின் செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு கூடிய முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகசபை கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தவிசாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கட்சியில் செயலாளர் நாயகமாக இதுவரை செயற்பட்டு வந்த ஹசன் அலியியிடம் தெரிவிக்கப்பட்டபோதிலும், அவர் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கட்சி தொடர்பில் இறுதித் தீர்மானங்களை தவிசாளர் இன்றி சுயமாக எடுக்கும் அதிகாரம், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானங்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

நேற்றைய பேராளர் மாநாட்டில் ஹசன் அலி கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg