Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைமைச் செயலகம் சென்று பல்வேறு கோப்புக்களில் கையெழுத்திடும் முதல்வர்

In இந்தியா
Updated: 07:27 GMT, Feb 13, 2017 | Published: 06:31 GMT, Feb 13, 2017 |
0 Comments
1848
icon_com
This post was written by : Surenth
OPS

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (திங்கட்கிழமை) தலைமைச் செயலகம் சென்று அங்கு பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை குழு அமைப்பது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்து இடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், சென்னை பொலிஸ் ஆணையாளர் ஜார்ஜை பணியிடமாற்றம் செய்தல். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றுதல் போன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் “அரசு இந்திரம் நல்லபடியாக செயல்படுகிறது. தலைமை செயலர், டி.ஜி.பி, ஆகியோரை அழைத்து அரசு நிர்வாகம் குறித்து பேசினேன், இன்று தலைமை செயலகத்திற்கு நேரில் செல்வேன்’’ என தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg