Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் – வால்ட்டர் தெரிவு செய்யப்பட்டார்

In ஐரோப்பா
Updated: 07:05 GMT, Feb 13, 2017 | Published: 07:05 GMT, Feb 13, 2017 |
0 Comments
1333
This post was written by : Sylviya

ஜேர்மனியின் புதிய ஜனாதிபதியாக பிரான்க் – வால்ட்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier ) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புச் சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஜனநாயகவாதியான இவர், ஜேர்மனியின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்க முன்பு ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வால்ட்டருக்கு ஆதரவாக 931 வாக்குகள் கிடைக்கப்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், ஜேர்மனியின் தற்போதைய ஜனாதிபதி  ஜோச்சிம் கோக் (Joachim Gauck), எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி தனது பதவியை  உத்தியோகபூர்வமாக வால்ட்டரிடம் கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg