Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல்வராகும் எண்ணம் இல்லை என சசிகலா தெரிவிப்பு

In இந்தியா
Updated: 11:09 GMT, Feb 13, 2017 | Published: 09:33 GMT, Feb 13, 2017 |
0 Comments
1444
icon_com
This post was written by : Surenth
sasikala

முதல்வராகும் எண்ணம் தனக்கு இருந்திருக்கவில்லை எனவும் அப்படி இருந்திருந்தால் ஜெயலலிதா மறைந்த உடனேயே முதல்வராகி இருப்பேன் எனவும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார்.

போயஸ் தோட்டத்தில் இன்று (திங்கட்கிழமை ) கட்சி தொண்டர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜெயலலிதா மறைந்த போது நான் நினைத்து இருந்தால் முதல்வராகி இருக்க முடியும். ஆனால் அந்த எண்ணம் எனக்கு துளியும் இல்லை. முதலமைச்சர் பன்னீர்செல்வம் தி.மு.கவோடு நெருங்கியதால் கட்சித் தொண்டரகள் அதிருப்தி அடைந்தனர்.

சட்டபேரவையில் தி.மு.க ஆதரவை பன்னீர்செல்வம் மறுக்கவில்லை. தி.மு.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் அவரை தொடர்ந்து முதலவராக அனுமதித்து இருப்பேன்.

இந்த அரசு தொடர வேண்டும் அதற்காக எனது உயிரையும் கொடுப்பேன். அ.தி.மு.க தான் தொடர்ந்து ஆட்சி அமைக்கும். 33 ஆண்டு காலமாக ஜெயலலிதாவுடன் இருந்தவள் எனக்கு பயம் கிடையாது.

எப்படி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்த முடியாது” என இதன் போது சுட்டிக்காட்டி இருந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg