Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

81 வயது மூதாட்டி பாலியல் வன்புணர்வு: சந்தேகநபர் கைது

In
Updated: 13:46 GMT, Feb 13, 2017 | Published: 12:46 GMT, Feb 13, 2017 |
0 Comments
1406
icon_com
This post was written by : Sylviya
14

லண்டனில் 81 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் Tooting எனும் இடத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

41 வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர், விம்பிளெடன் நீதவான் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டி பேரூந்து ஒன்றிலிருந்து இறங்கியதிலிருந்து பின்தொடர்ந்த சந்தேக நபர், மூதாட்டியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த மூதாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg