Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார் கனேடிய பிரதமர்

In
Updated: 15:25 GMT, Feb 14, 2017 | Published: 06:39 GMT, Feb 14, 2017 |
0 Comments
1259
This post was written by : Sylviya

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ (Justin Trudeau) நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஜஸ்ரின் ரூடோவை சந்திப்பது இதுவே முதன் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த ட்ரம்ப், கனடாவுடனான வர்த்தக உறவுகள் எதிர்வரும் காலங்களில் மேன்மேலும் விருத்தியடையும் எனவும் மெக்ஸிக்கோவுடனான வர்த்தக உறவுகளை போல் அல்லாது அது வளர்ச்சிப் பாதையில் செல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோவுடன் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரு தலைவர்களும் பொருளாதார ரீதியான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg