Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்ந்த ஐவர் கைது

In இலங்கை
Published: 07:21 GMT, Feb 14, 2017 |
0 Comments
1074
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
gem (1)

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையிலுள்ள டின்சின் பகுதியில், சட்டவிரோதமாக முறையில் மாணிக்கக் கல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை குறித்த பிரதேசத்தில் நடத்திய தேடுதலின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

gem (3) gem (2)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg