Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அல் – பாப் நகர் தாக்குதல்களில் துருக்கி வீரர் ஒருவர் உயிரிழப்பு, நான்கு வீரர்கள் காயம்

In ஐரோப்பா
Updated: 08:42 GMT, Feb 14, 2017 | Published: 08:05 GMT, Feb 14, 2017 |
0 Comments
1190
This post was written by : Sylviya

சிரியாவின் அல் – பாப் (al-Bab) நகரை கைப்பற்றும் பொருட்டு நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதல்களில் துருக்கி வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு துருக்கி வீரர்கள் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த தகவல் துருக்கியின் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் காயமடைந்த துருக்கி வீரர்கள் துருக்கியின் எல்லையில் உள்ள கிலிஸ் (Kilis) எனும் பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

காயமடைந்த வீரர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது இவ்வாறிருக்க, கடந்த நாட்களில் அல் – பாப் நகரில் தொடர் தாக்குதலை நடத்தி வந்த துருக்கி வீரர்கள், குறித்த நகரின் 10 சதவீதத்தை கைப்பற்றியுள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதானிப்புக் குழு தெரிவித்துள்ளது.

புதுவருட பிறப்பின் போது இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள், அல் – பாப் நகரிலிருந்த தீவிரவாதிகளாலேயே மேற்கொள்ளப்பட்டதென துருக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளதால், அல் – பாப் நகர் மீதான தாக்குதல்களை துருக்கி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg