Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போதைப் பொருள் மாத்திரை அதிகரித்துக் கொண்டே உள்ளது: முஜீபுர் றஹ்மான் குற்றச்சாட்டு

In இலங்கை
Published: 10:59 GMT, Feb 14, 2017 |
0 Comments
1315
icon_com
This post was written by : Surenth
Drugs Use in Colombo

கொழும்பில் விற்பனை செய்யப்படும் போதைப் பொருள் மாத்திரைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியும் எனவும் அது தொடர்பில் பொலிஸார் எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பு அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக வாழைத்தோட்டம் பகுதியில் அதிகமான போதைப் பொருள் மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை பொலிஸாருக்கு தெரியும் எனவும் அவர் கூறினார்.

கடந்த வாரம் கொழும்பு மத்திய வீதி பகுதியில் 25 வயதையுடைய இளைஞன் ஒருவன் போதைப் பொருள் மாத்திரை பாவித்து உயிரிழந்ததாகவும் இதற்கு பின்னரும் அந்த பகுதியில் போதை மாத்திரை குறையவில்லை எனவும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg