Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒஸ்ரியாவில் மீண்டும் ஹிட்லர்

In உலகம்
Published: 12:55 GMT, Feb 14, 2017 |
0 Comments
1058
icon_com
This post was written by : elayathambi
Hitler_1_16043

அடால்ஃப் ஹிட்லரை  மீண்டும் நினைக்க வேண்டிய சூழல் ஒன்றை அந்த நாட்டின் 20 வயது இளைஞன் ஒருவன் ஏற்படுத்தியுள்ளான். ஹிடலர் பிறந்து வளர்ந்த ஒஸ்ரியாவில் ப்ரனோ ஆம் இன்னில் இந்த இளைஞனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அச்சு அசலாக ஹிட்லரைப் போல மாற்று வேடமிட்ட இந்த இளைஞன் அப்பிராந்திய புத்தகக் கடையொன்றில் இரண்டாம் உலகப் போர் குறித்த நூல்களை தேடியிருக்கிறார்.

தவிரவும் ஹிடலர் 1889 இல் பிறந்து வளர்ந்த அவரின் இல்லத்தின் முன் குறித்த ஹிடலர் வேடமிட்ட இளைஞன் நிற்பதை அப்பிரதேசவாசி ஒருவர் புகைப்படம் எடுத்து முக நூலில் வெளியிட்டிருக்கிறார்.

இளைஞனை ஹிடலர் உருவில் பல தடவை பார்த்திருப்பதாக இன்னுமொருவர் குறிப்பிட்டுள்ளார். அந்த இளைஞன் எதையோ சொல்ல நினைக்கிறான் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தகவல் அறிந்த காவல் துறை இளைஞனை கைது செய்து சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் சூத்திரதாரியிம், பேரழிவுகளுக்கு காரணகர்த்தாவும் யூத இன அழிப்பை திட்டமிட்டு வழி நடத்தியவருமான ஜேர்மனிய நாசிக் கட்சியின் தலைவரான அடால்ஃப் ஹிட்லர் செம்படைகள் சுற்றி வளைத்த போது தன்னை தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg