Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 15:10 GMT, Feb 14, 2017 | Published: 14:13 GMT, Feb 14, 2017 |
0 Comments
1181
icon_com
This post was written by : S.K.Guna
Michael Flynn

அமெரிக்காவில் தனிப்பட்ட நபர்கள் ராஜதந்திரவிடயங்களில் தலையிடுவது சட்டரீதியாக தடைசெய்யப்பட்டநிலையில் அந்தக்காரணமே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் லெப்டினட் ஜெனரல் மைக்கல் பிளினை பதவி விலகச்செய்திருக்கிறது.

டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் மைக்கல் பிளின் ரஸ்ய அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதை தொடர்ந்தே அவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகிய மைக்கல் பிளின்னின் இடத்திற்கு ஓய்வு பெற்ற லெப்டினட் ஜெனரல் கீத் கெலோக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Georgian Orthodox Church

ஜோர்ஜியாவின் பழமைவாத கிறிஸ்தவ திருச்சபையின் மூத்த உறுப்பினர் ஒருவரை நஞ்சூட்டிக் கொல்ல முயன்ற குற்றசாட்டில் மதகுரு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட மதகுருவின் பயணப்பொதியில் சயனைட் நஞ்சு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் சிகிச்சைபெற்று வரும் திருச்சபையின் மூத்தஉறுப்பினர் ஒருவரை நஞ்சூட்டிக் கொல்லும் நோக்குடன் மேற்படி மதகுரு ஜேர்மனிக்கு பயணமாக இருந்த நிலையில் விமானநிலையத்தில் தடுத்துவைக்கபட்டுள்ளார்.

Luxembourg 1

லக்ஸம்பேர்க்கில் பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் மோதியதால் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

பிரான்சிலிருந்து சென்ற சரக்கு ரயிலுடன் மேற்படி பயணிகள் தொடருந்து காலை 9 மணியளவில் மோதியது. இந்த விபத்துக் குறித்த விசாரணைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

Justin Trudeau

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்புக்கும் கனேடியப் பிரதமர்  யஸ்ரின் ரூடோவுக்கும் இடையில் வெள்ளைமாளிகையில் இடம்பெற்ற பேச்சுக்களுக்கு பின்னர் ஊடகமாநாடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஊடக மாநாட்டில் கருத்துரைத்த டொனால்ட் ட்ரம்ப்  தான் ஏற்கனவே பிறப்பித்த பயணத்தடையை நியாயப்படுத்தியிருந்தார்.

டொனால்ட் ட்ரம்புக்கும் யஸ்ரின் ரூடோவும் ஒருவரையொருவர் விமர்சிக்காமல் இந்த ஊடகமாநாட்டை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்புடன் யஸ்ரின் ரூடோ நடத்தவுள்ள பேச்சுக்களில் கனேடியப் பெறுமானங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் உட்பட்ட விடயங்கள் இடம்பெறவுள்ளன.

Spanish police arrested

சட்டவிரோதமாக குடியேறிகளை கடத்திய குற்றச்சாட்டில் ஸ்பெயின் மற்றும் மொரோக்கோவில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜிப்ரால்டர் நீரிணையூடாக மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டவிரோத  ஆட்கடத்தலின் மூலம் கொத்தடிமை  விபச்சாரத்துக்கென நைஜீரியப் பெண்களும் கடத்த்பபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை 40 படகுகளில் சட்டவிரோத குடியேறிகளை ஐரோப்பாவுக்கு கொண்டுவந்தவர் எனவும் அறியப்படுகிறது.

Rolls-Royce

வாகன உற்பத்தியில் மிகப்பெரிய நிறுவனமான பிரித்தானியாவின் ரோல்ஸ் -ரோய்ஸ் பெரும் நிதி நட்டத்தை சந்தித்துள்ளது.

என்றுமில்லாத வகையில் ரோல்ஸ் -ரோய்ஸ்சுக்கு கடந்த ஆண்டில் 4.6 பில்லியன் பவுண்ஸ் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பவுண்ஸ் நாணயத்தின் வீழச்சியும், ஊழல் விவகார சமரச நடவடிக்கைகளுக்கான இழப்பீடுகளும் இந்த நட்ட நிலைமைக்கு முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg