Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதாகரன் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார்

In
Updated: 15:34 GMT, Feb 15, 2017 | Published: 04:13 GMT, Feb 15, 2017 |
0 Comments
1428
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Tamil_News_68820917607

சசிகலா, இளவரசி ஆகியோரையடுத்து சுதாகரனும்  பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தார்.

அவர் சிறைக்கு அனுப்பப்பட்டாரா?, அல்லது, மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்படுவாரா? என்பது தொடர்பாக  உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுதாகரனின் மனு நிராகரிப்பு: அரை மணிநேரத்தில் சரணடைய உத்தரவு

நீதிமன்றில் நேரில் ஆஜராக நாளைவரை காலஅவகாசம் கோரி குற்றவாளி சுதாகரன் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே சுதாகரன் இன்னும் அரை மணிநேரத்தில் சரணடைவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுதாகரன் நாளை சரணடைவார்

உடல்நலக் குறைவு காரணமாக குற்றவாளியான சுதாகரன் நாளை (வியாழக்கிழமை) பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம் அருகே பரபரப்பு: பொலிஸார் தடியடி

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகப் பகுதியில் சற்று அசாதாரண சூழ்நிலை நிலவிவருகின்ற நிலையில், அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு பொலிஸார் தடியடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சசிகலா தரப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

உடல்நிலை சரியில்லை: சுதாகரன் மனு தாக்கல்

உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் நீதிமன்றில் நேரில் ஆஜராக முடியவில்லை எனத் தெரிவித்து குற்றவாளியான சுதாகரன் பெங்களுர் கூடுதல் உரிமையியல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்தில் சரணடைந்தார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, ஆகியோர் பெங்களூர் நீதிமன்றத்தில்  நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் தற்போது சரணடைந்துள்ளனர்.

குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகிய மூவரையும் நீதிமன்றில் சரணடையுமாறு உத்தரவிடப்பட்டதற்கமைய சசிகலாவும், இளவரசியும் சரணடைந்துள்ள நிலையில், சுதாகர் இதுவரை சரணடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சற்று நேரத்தில் சரணடையவுள்ளார் சசிகலா

உச்சநீதிமன்ற உத்தரவிற்கமைய சசிகலா உள்ளிட்ட மூவரும் அக்ரஹாரா சிறை வளாகத்தை வந்தடைந்துள்ள நிலையில் சற்று நேரத்தில் சரணடையவுள்ளனர்.

அக்ரஹாரா சிறை வளாகத்தில் குழுமியுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள்

நீதிமன்றில் சரணடையும் பொருட்டு சசிகலா உள்ளிட்டோர் பயணிக்கும் வாகனம் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையை இன்னும் சற்று நேரத்தில் வந்தடையவுள்ள நிலையில், அங்கு அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் சரணடைய பெங்களூர் வந்தடைந்தார் சசிகலா

நீதிமன்றத்தில் சரணடையும் பொருட்டு சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூரை வந்தடைந்துள்ளனர். அவர்கள் பயணிக்கும் கார் பெங்களூரை தாண்டி பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

சசிகலா சரணடையவிருந்த நீதிமன்ற அறை மாற்றம்

பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா சரணடையவிருந்த நீதிமன்ற அறை மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி சசிகலா உள்ளிட்ட மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறை வளாகத்திலுள்ள அறையில் சரணடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ராஜினாமா

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து கருப்பசாமி பாண்டியன் ராஜினாமா செய்துள்ளார்.

அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்.-க்கு அஞ்சலி செலுத்திவிட்டு பெங்களூர் புறப்பட்டார் சசிகலா

நீதிமன்றில் சரணடைவதற்கு முன்னர் ராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அங்கு சற்று நேரம் தியானத்திலும் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

சசிகலா- பழனிச்சாமி மீது வழக்கு பதிவு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களை கடத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கூவத்தூர் பொலிஸ் நிலையத்தில் குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

மெரீனாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மலர்தூவி, நிலத்தில் வீழ்ந்து வணங்கி அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டு ஜெயலலிதா நினைவு சமாதியில் மூன்று முறை அடித்து சசிகலா சபதம் செய்தார்.

நீதிமன்றில் சரணடைய புறப்பட்டார் சசிகலா

பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் பொருட்டு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகாரன் ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.

போயஸ் கார்டனிலிருந்து அண்ணா நினைவாலயம் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து பெங்களூர் நீதிமன்றம் நோக்கி செல்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் சரணடைய தயாராகிறார் சசிகலா

நீதிமன்றில் ஆஜராக காலஅவகாசம் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றில் சரணடைவதற்காக போயஸ் கார்டனிலிருந்து பெங்களூர் புறப்பட சசிகலா தயாராகி வருகிறார்.

சாலை வழியாக அவர் பெங்களூரை சென்றடைவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் சரணடைய தயாராகிறார் சசிகலா

நீதிமன்றில் ஆஜராக காலஅவகாசம் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றில் சரணடைவதற்காக போயஸ் கார்டனிலிருந்து பெங்களூர் புறப்பட சசிகலா தயாராகி வருகிறார்.
சாலை வழியாக அவர் பெங்களூரை சென்றடைவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சசிகலா சரணடைவதற்கு கால அவகாசம் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்றில் ஆஜராக 2 வார காலஅவகாசம் கோரி மனு தாக்கல்

உடல் நிலையை கருத்திற் கொண்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக 2 வாரங்கள் கால அவகாசம் வழங்குமாறு கோரி சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சியில் இணைந்த உடனேயே துணைப் பொதுச்செயலாளர் ஆனார் தினகரன்

அ.தி.மு.க.வில் டி.டி.வி.  தினகரன் இணைந்துகொண்டதாக செய்திகள் வெளியாகி சில மணி நேரங்களிலேயே, அவர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.

ஜெயாவால் நீக்கப்பட்ட தினகரன் சசிகலாவால் இணைப்பு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டிருந்த டி.டி.வி.தினகரனை, மீண்டும் கட்சியில் இணைத்துக்கொண்டார் சிசிகலா.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg