Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரிஏய்ப்பு விவகாரம்: சானியா மிர்சா ஆஜராகுவதில் சிக்கல்!

In டெனிஸ்
Updated: 08:20 GMT, Feb 15, 2017 | Published: 06:49 GMT, Feb 15, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Anojkiyan
olpugRiebigdg

வரிஏய்ப்பு செய்ததாக இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவை எதிர்வரும் 16ஆம் திகதிக்குள் ஆஜராகுமாறு சேவை வரித்துறை அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தனக்கு பதிலாக பிரதிநிதி ஒருவர் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என சானியா மிர்சா தரப்பில் மத்திய சேவை வரித்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அவுஸ்ரேலியா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க செல்வதால் தன்னால் இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது என சானியா மிர்சா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா அரசின் தூதராக 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு மாநில அரசு 1 கோடி ரூபா ஊக்கத்தொகையாக வழங்கியது. இந்த தொகைக்கு சானியா மிர்சா சேவை வரி எதுவும் செலுத்தவில்லை.

இதையடுத்து மத்திய சேவை வரித்துறையின் ஐதராபாத் மண்டல முதன்மை ஆளுனர் அலுவலகம் சார்பில் சானியா மிர்சாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg