Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 08:10 GMT, Feb 15, 2017 | Published: 08:10 GMT, Feb 15, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Risha
mk-stalin

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பேதும் விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

கோவையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இன்று மாலைக்குள் சென்னை வருமாறு கட்சி கொறடா சக்ரபாணி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

அதேவேளை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg