Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூவத்தூர் விடுதியில் விசாரணை: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

In இந்தியா
Updated: 09:21 GMT, Feb 15, 2017 | Published: 09:21 GMT, Feb 15, 2017 |
0 Comments
1174
This post was written by : Risha

சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் விடுதியில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை, குறித்த பகுதியில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தம்மையும், பிற சட்டமன்ற உறுப்பினர்களையும் சசிகலா தரப்பினர் கடத்தியதாக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் செய்த முறைப்பாட்டை அடுத்தே இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், குறித்த விடுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்களை தவிர ஏனையவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சரவணனின் முறைப்பாட்டை அடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது ஆட்கடத்தல், சிறை பிடித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg