Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் உரிமைகளை கட்டுப்படுத்தும்: பிரித்தானியர்கள் கவலை

In
Updated: 10:42 GMT, Feb 15, 2017 | Published: 10:34 GMT, Feb 15, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Elakkiya
A Union flag flies next to the flag of the European Union in Westminster, London

பிரெக்சிற் விவகாரம் தாம் வசிக்கும் நாடுகளில் தமது உரிமைகளை கட்டுப்படுத்தும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்களை பாதிக்குமா என்பது குறித்த கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இன்று (புதன்கிழமை) இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி கணக்கெடுப்பின் பிரகாரம், 83 சதவீதமானோர் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர். அதேவேளை 3.8 சதவீதமானோர் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது ஐஸ்லாந்து, மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பிரித்தானியர்களிடம் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 2 சதவீதமானோர் மாத்திரமே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று பதிலளித்துள்ளனர்.

57.6 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் 58 சதவீதமானோர் பிரித்தானியா திரும்புவது குறித்து தீர்மானிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg