Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக ஆளுநர் இந்திய அரசியலமைப்பை மீறுவது பாரதிய ஜனதாவுக்காக

In இந்தியா
Updated: 16:13 GMT, Feb 15, 2017 | Published: 16:03 GMT, Feb 15, 2017 |
0 Comments
1200
This post was written by : elayathambi

தமிழகத்தில் தள்ளாடும் அரசை சரி செய்வதில் தொடர்ந்தும் ஆளுநர் கவனம் செலுத்தாது இருப்பது சட்ட வல்லுனர்களின் விமர்சனத்துக்கு இலக்காகி இருக்கிறது. அரசியலமைப்பிற்கும் சட்ட நியதிகளுக்கும் உட்பட்டு செயற்பட வேண்டிய ஆளுநர் மத்திய ஆளும் கட்சியின்  அரசியல் தேவைகளுக்காக செயற்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பின் பின்னர் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்தில் மத்திய ஆளும் கட்சி இலாபம் தேட முனைவதாகக் கூறப்படுகிறது. அதுவே  அதிமுக பிளவுபடக் காரணம் என்ற செய்திகளும் கசிந்துள்ளன.

பிஜேபியின் ஆதரவை அடுத்தே பன்னீர்ச்செல்வம் எதிர் நிலை எடுத்ததாக அறிவிக்கப்படுகிறது. செல்வாக்கற்ற தமிழக பிஜேபிக்கான முழுமையான ஆதரவை சசிகலா தரப் போவதில்லை என்பதை பிஜேபி தலைமை அறிந்து கொண்டது. தவிரவும் பிஜேபிக்கு எதிரான நடராஜனின் பொங்கல் தின உரையும் பிஜேபியின் தலைமையை எரிச்சலடைய வைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் அதிமுக வின் பொதுச் செயலாளரா சசிகலா வந்ததைச் சகித்துக் கொண்ட பிஜேபி அவர் முதல்வராவதை விரும்பவில்லை. அதை கைவிடுமாறு பிஜேபியின் மேலிடம் கேட்டுக் கொண்ட போதும் சசிகலா அதை ஏற்கவில்லை. மறுபுறத்தே  முதல்வர் பதவியை இராஜினாம செய்யும்படி பன்னீர்ச்செல்வத்தை சசிகலா தரப்பு வலியுறுத்தியது. இராஜினாமா கடிதம் கையெழுத்திடப் பட்டபோது பன்னீரை போயஸ் தோட்டத்தில் சசிகலா தரப்பினர் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இவ்விடயங்களை உளவுப்பிரிவின் மூலம் அறிந்து கொண்ட பிஜேபி, அதன் பின்னரே சசிகலாவுக்கு எதிரான பன்னீரின் அனைத்து விடயங்களுக்கும் ஆதரவு தர ஆரம்பித்துள்ளது. அந்த ஆதரவின்  தொடர்ச்சிதான் ஆளுநரின் காலதாதமதம் என்றும் கூறப்படுகிறது.

இன்று மீண்டும் அதிமுக வின் இரு தரப்பையும் சந்தித்திருக்கும் ஆளுநரின் அடுத்த கட்ட நடவடிக்கை எதுவாக இருக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg