Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

In இலங்கை
Published: 17:49 GMT, Feb 15, 2017 |
0 Comments
1115
icon_com
This post was written by : Vithushagan
unnamed (14)

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள ஆசிரியர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற வேளையிலேயே போக்குவரத்துப் பொலிசாரினால் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியதற்காகவும் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாகவும் தெரிவித்து குறித்த நபர் மீது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போதே இவர் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஆசிரியர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேகநபரை வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன் விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed (13)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg