Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சரின் உதவியுடன் சட்டவிரோதமாக கட்டப்படும் விடுதி! – சார்ள்ஸ் எம்.பி.குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 04:51 GMT, Feb 16, 2017 | Published: 04:51 GMT, Feb 16, 2017 |
0 Comments
1606
This post was written by : Varshini

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கடலோரப் பகுதியில் அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் பிரதேச சபையின் அனுமதியின்றி விடுதியொன்று கட்டப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் அங்கு சென்று பார்வையிட்ட சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கட்டிடத்திற்கான நிர்மாணப்பணிகளை இடை நிறுத்தும் வகையில் மன்னார் பிரதேச சபையினால் அறிவித்தலொன்றும் ஒட்டப்பட்டுள்ளது.

எனினும் விடுதியமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இதன் பணிகளை உடன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg