Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்: முபீன்

In இலங்கை
Updated: 07:10 GMT, Feb 16, 2017 | Published: 06:37 GMT, Feb 16, 2017 |
0 Comments
1227
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
mubeen

அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாட்டில் இடம்பெற்ற கட்சி மறுசீரமைப்பின் பின்னர் கிழக்கில் அதன் பலம் அதிகரித்துள்ளதென குறிப்பிட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என்.முபீன், இவ்வருட இறுதிக்குள் நடைபெறக்கூடுமென எதிர்பார்க்கப்படும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மக்கள் பலத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமென குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, அதிகாரம் மிக்க பதவிகளில் இருந்து தூக்கியெறியப்பட்ட சிலர் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள முபீன், இவ்வாறானவர்கள் குறித்து மக்கள் தெளிவுடன் இருப்பதாகவும் இவர்களை மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg