Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லாரஸ் உலக விருதுகள்: ஆண்டின் சிறந்த வீரராக உசேன் போல்ட் தெரிவு

In விளையாட்டு
Published: 08:26 GMT, Feb 16, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Anojkiyan
usain b

விளையாட்டு போட்டிகளின் ஆஸ்கர் விருது என அழைக்கப்படும் லாரஸ் உலக விருதுகளின், ஆண்டின் சிறந்த வீரராக உலகின் அதிவேக மனிதர் என வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் தடகள வீரரான உசேன் போல்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரேஸில் ரியோ ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்கள் வென்ற உசேன் போல்ட்டுக்கு லாரஸ் விருது பெறுவது இது 4வது முறையாகும். இதற்கு முன்னர் அவர் கடந்த 2009, 2010 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்த விருதை வென்றிருந்தார்.

இதன் மூலம் அதிக முறை இந்த விருதை கைப்பற்றிய டென்னிஸ் நட்சத்திரமான சுவிட்சர்லாந்தின் ரோஜடர் பெடரர், செரீனா வில்லியம்ஸ், கெலி ஸ்லாட்டர் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

மொனாக்கோவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இவ் விருது வழங்கும் நிகழ்வில், புகழ்பெற்ற அமெரிக்க தடகள வீரரான மைக்கேல் ஜோன்சனிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்ட உசேன் போல்ட் கூறும்போது,

”நான் உங்களின் சதனையை முறியடித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அற்புதமான இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

லாரஸ் எனக்கு மிகப்பெரிய விருதாகும். இதை நான் 4வது முறையாக பெறுகிறேன். இதன் மூலம் சிறந்த வீரர்களான பெடரர் உள்ளிட்டோரின் சாதனையை சமன் செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg