Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளைய தளபதி எளிமையான மனிதர்: ஜுனியர் நடிகர் புகழாரம்

In சினிமா
Updated: 12:07 GMT, Feb 16, 2017 | Published: 12:02 GMT, Feb 16, 2017 |
0 Comments
1223
icon_com
This post was written by : Shailu
vijay__large

‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இளைய தளபதி விஜய் மீண்டும் அட்லியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்தில் நடித்த ஜுனியர் நடிகர் ஒருவர் விஜய்யை பற்றி தனது பேஸ்புக் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ‘ விஜய் நடிக்கும் படத்தில் ஜுனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்ததன் மூலம் விஜய் படத்தின் முழு நாள் படப்பிடிப்பமை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் நான் தளபதியின் பக்கத்திலேயே நிற்பது மாதிரியான காட்சி இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அப்போது, விஜய, தன்னுடைய நடிப்பால் மட்டுமல்ல அவர் படப்பிடிப்பு தளத்திற்குள் வருகிறபோது ரசிகர்களை தனது சிரிப்பாலும், கைகளை அசைத்தும் சந்தோஷப்படுத்தினார்.

ரொம்பவும் ரிஸ்க்கான சண்டைக் காட்சியில் டூப் இல்லாமலும், ரோப் இல்லாமலும், சேப்டி பெல்ட் இல்லாமலும் செய்தார்.அவருக்கான குடையை பிடிப்பதற்குக்கூட இன்னொரு ஆள் வைத்துக் கொள்ளாமல், அவரே முழு நாளும் வைத்திருந்தார்.

இவ்வளவு எளிமையாக ஒரு மனிதர் இருக்கலாம். ஆனால், ஒரு பிரபலம் இப்படி இருப்பது மிகவும் அரிது. அவருடைய ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg