Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரேபார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Published: 14:14 GMT, Feb 15, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : S.K.Guna
Donald Trump

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு  தேசிய பாதுகாப்பு  பிரிவும் (NSA) சமஸ்டி புலனாய்வுப்பிரிவும் (FBI)சட்ட விரோதமாக தகவல்களை கசிய விட்டதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்பரப்புரைகள் இடம்பெற்றகாலத்தில் ரஸ்யாவுடன் தனது குழுவினர் தொடர்புகளை பேணியதான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளநிலையில் டொனால்ட் ட்ரம்பின் இந்தக் குற்றச்சாட்டு வெளிப்பட்டுள்ளது.

murder123

மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை வழங்குமாறு வடகொரியா கோரியுள்ளது.

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜொங் நாம் மலேசிய விமானநிலையத்தில் வைத்து மர்மநச்சுதாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரது படுகொலைக்கு வட கொரிய புலனாய்வுத்துறையே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கிம் ஜொங் நாமின் சடலத்தை வழங்குமாறு வடகொரியா மலேசியாவிடம் கோரியுள்ளது.

Bank of England

பிரித்தானியாவில்  புழக்கத்தில் உள்ள புதிய 5 பவுண்ஸ் நாணயத்தாளில் மிருகக்கொழுப்பு கலந்துள்ளதான சர்ச்சைகள் நிலவும்போதிலும் மேற்படி நாணயத்தாளை புழக்கத்தில் இருந்து அகற்றப்போவதில்லையென பிரித்தானிய மத்திய வங்கி இன்று அறிவித்துள்ளது.

மிருகக்கொழுப்பு கலந்துள்ள மேற்படி நாணயத்தாளை சில இந்து ஆலயங்கள் ஏற்க மறுப்பதும் குறிப்பிடத்தக்கது.

François Fillon.

பிரான்சின் புதிய ஜனாதிபதியாக தான் தெரிவு செய்யப்பட்டால் 16 வயதானவர்களையும் முழுமையான குற்றவியல் சட்டத்தின்படி தண்டிக்கும்வகையில் மாற்றங்களை கொண்டுவரப்போவதாக வேட்பாளர் பிரான்சுவா பில்லோங் அறிவித்துள்ளார்.

பிரான்சில் தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டப்படி 16 வயதுக்கு உட்பட்டவர்களை முழுமையான குற்றவியல் சட்டப்படி தண்டிக்க முடியாது.

Secretary of Defense James Mattis

நேட்டோ அமைப்பின் பாதுகாப்புக்கு பங்களிப்பதற்காக அமெரிக்காவுக்கு அதிக நிதி வழங்கப்படவேண்டுமென அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மற்றிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வழங்கப்படாவிட்டால் நேட்டோ அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் பங்களிப்பில் மாற்றங்கள் ஏற்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

edappadi-palanisamy-meets-the-governor

தமிழக சட்டப்பேரவை கூட்டப்பட்டு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவேண்டுமென தமிழக ஆளுனரிடம் காபந்து முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநருடன் இன்றிரவு சந்தித்தபோதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் இந்தநிலையில் முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் ஆளுநருடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார். ஆளுநர் நாளை தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg