Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பை வந்தடையவுள்ள சைட்டத்திற்கு எதிரான வாகனப் பேரணி

In இலங்கை
Updated: 04:13 GMT, Feb 17, 2017 | Published: 04:12 GMT, Feb 17, 2017 |
0 Comments
1313
icon_com
This post was written by : Risha
malabe

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மூடுமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் ஐந்து இடங்களில் ஆரம்பித்த வாகன பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பை வந்தடையவுள்ளது.

மக்களை தெளிவுப்படுத்தும் நோக்கில் இந்த வாகன பேரணி போராட்டம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி அநுராதபுரம், ரத்தினபுரி, கண்டி, குளியாபிட்டிய மற்றும் கராபிட்டிய ஆகிய நகரங்களில் இருந்து இந்த வாகன பேரணி ஆரம்பிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, சைட்டம் பட்டதாரிகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதா? இல்லையா என்பது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை இன்று தீர்மானம் எடுக்கவுள்ளது.

இந்த தீர்மானம் மிக்க கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg