Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போயஸ் தோட்டத்தை நினைவு இல்லமாக மாற்றும் கோரிக்கை மனு தள்ளுபடி

In இந்தியா
Published: 04:12 GMT, Feb 17, 2017 |
0 Comments
1441
icon_com
This post was written by : Surenth
Poes Garden

போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணையை மேற்கொட உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஹுலுவாடி ஜி.ரமேஷ் , ஆர்.மகாதேவன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டம் என்று அழைக்கப்படும் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று எஸ்.பார்த்திபன் என்ற நபரால் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

தமிழக முதலமைச்சர்களாக பதவி வகித்த காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்களின் வீடுகளை நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றியது போல, ஜெயலலிதாவின் வேதா இல்லத்தையும், நினைவு இல்லமாக மாற்ற உத்தரவிடவேண்டும் என குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் “முன்னர் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றது அல்ல என கடந்த 12 ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே இந்த வழக்கும் அதே கோரிக்கையை முன் வைப்பதால் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். தற்போது ஜெயலலிதா மரணம் அடைந்துள்ள நிலையில் அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

இருந்தும் ஜெயலலிதா குற்றத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற அடிப்படையில் அவரது உருவப்படமோ அவர் தொடர்பான நினைவு சின்னமோ பொது இடங்களில் வைக்க முடியாது என மேல் நீதிமன்ற உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg