Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் ரி-ருவென்ரி: சொந்த மண்ணிலேயே அவுஸ்ரேலியாவை சிதறடித்த இலங்கை அணி

In கிாிக்கட்
Published: 12:36 GMT, Feb 17, 2017 |
0 Comments
1297
icon_com
This post was written by : Anojkiyan
guna

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், இலங்கை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

மெல்பேர்ன் நகரில் இன்ற (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அவுஸ்ரேலிய அணி சார்பில், அதிகபட்ச ஓட்டமாக அணித்தலைவர் ஆரோன் பிஞ்ச் 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் லசித் மாலிங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைதொடர்ந்து, 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 5 விக்கெட்டை இழந்து, இறுதி பந்து வரை போராடி வெற்றிபெற்றது. இதன்போது அணிக்காக குணரட்ன 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சு சார்பில் செம்பா, டெர்னர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணி சார்பில் 52 ஓட்டங்களை பெற்ற குணரட்ன தெரிவுசெய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில், இலங்கை அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி ஜிலோங்கில் நடைபெறவுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg