Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வாதிகார முறையில் வாக்கெடுப்பு: தொடர் போராட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் முடிவு

In இந்தியா
Published: 04:10 GMT, Feb 19, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Shailu
Mk Stalin Deputy Chief Minister of Tamil Nadu from 2009 to 2011

சட்டசபையில் சர்வாதிகார முறையில் வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இடம்பெற்ற அசாதாரண நிலை மற்றும் அதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை கண்டித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் சென்னை மெரினா காந்தி சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்திந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்,

‘தமிழகத்திற்கு இது ஒரு மோசமான ஒரு கறுப்பு நாளாக அமைந்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் பெற்றிருக்கக்கூடிய சசிகலா நடராஜன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது பினாமி ஆட்சியாக, ஒரு முகமூடி ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய வகையில் சட்டசபையில் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

மறைமுக வாக்கு என்ற அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால், அதன்படி செய்ய சபாநாயகர் முன் வரவில்லை.

காவல்துறையையும், அடியாட்களையும் வரவழைத்து சட்டசபையில் இருந்த தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தி வெளியேற்றினர். இதில் நானும் தாக்கப்பட்டேன். அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை சர்வாதிகார முறையில் நடத்தியுள்ளனர்.

இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்ற பொதுமக்களுடன், தி.மு.க.வும் மட்டுமல்ல, பல்வேறு கட்சிகளையும், ஒன்று திரட்டி, அமைதி வழியிலான விரைவில் மிகப் பெரிய தொடர் போராட்டத்தில் ஈடுபட நாங்கள் முடிவு செய்துள்ளளோம்.’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg