Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய அரசினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை பாதிக்கும்

In உலகம்
Updated: 04:44 GMT, Feb 20, 2017 | Published: 04:42 GMT, Feb 20, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Sylviya
01

சிரிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் சிரிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என அங்குள்ள போராளிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவின் டமஸ்கஸ் (Damascus), ஹொம்ஸ் (Homs), மற்றும் தெற்குப் பகுதிகளில் அண்மையில் சிரிய படையினர்கள் தாக்குதல்கள் மேற்கொண்டதை தொடர்ந்தே மேற்குறித்தவாறு போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்தும் உரிமை தங்களுக்கு உண்டு எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்ஸர்லாந்து ஜெனீவாவில் எதிர்வரும் நாட்களில் ஐ.நா தலைமையலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே சிரிய போராளிகள் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளனர்.

ஐ.நாவின் சிரியாவுக்கான தூதுவர் ஸ்டெபன் டி மிஸ்தூரா (Staffan de Mistura) பெப்ரவரி 23 ஆம் திகதி சிரிய சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

01 - 2
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg