Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நகரசபையினால் சேர்க்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு

In இலங்கை
Published: 09:45 GMT, Feb 20, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
DSC00525

 

ஹட்டன் டிக்கோயா நகரசபையினால் சேர்க்கப்படும் குப்பைகளை குடாகம பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடாகம பிரதேச மக்கள் இன்றும் (திங்கட்கிழமை) வீதியை மறித்து இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் பொதுப் போக்குவரத்து சுமார் அரை மணித்தியாலத்துக்கு மேலாக பாதிப்புக்குள்ளாகியது.

இதனைத் தொடர்ந்து இவ்விடத்திற்கு விரைந்த ஹட்டன் பொலிஸார் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தியதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.

இதேவேளை ஹட்டன் நகரில் சேர்க்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு சரியான இடம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் பிரச்சினை தீரும் வரை குப்பைகளை கொட்டகலை பிரதேசத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கினிகத்தேனையில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

DSC00539 DSC00534 vlcsnap-2017-02-20-13h14m37s71

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg