Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொலைபேசியை உபயோகிக்கும் ஓட்டுனர்களுக்கு அபராதத் தொகை இரட்டிப்பாக்கப்படவுள்ளது

In
Updated: 10:20 GMT, Feb 20, 2017 | Published: 10:19 GMT, Feb 20, 2017 |
0 Comments
1186
icon_com
This post was written by : Sylviya
11

ஸ்கொட்லாந்தில் வாகனங்களை செலுத்திக் கொண்டே தொலைபேசியை உபயோகிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை இரட்டிப்பாக்கப்படவுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விடயம் தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தின் படி, வாகனத்தை செலுத்திக்கொண்டே தொலைபேசியை உபயோகிப்பவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த அபராதத் தொகையின் இரண்டு மடங்கினை செலுத்த வேண்டி ஏற்படும் எனவும் அது தொடர்பில் தற்போது வாகன ஓட்டுன்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புதிய சட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 01 ஆம் திகதி நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் அதன் படி, மேற்குறித்த குற்றத்தில் ஈடுபடும் ஒருவருக்கு 200 பவுண்கள் அபராதம் மற்றும் 06 புள்ளிகள் வழங்கப்படு; எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைபேசியை உபயோகித்துக்கொண்டு வாகனம் செலுத்துவதால் ஏற்படும் வீதி விபத்துக்களை தவிர்க்கும் வகையிலேயே குறித்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg